தமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் சிறப்பு தமிழ்ப் பட்டிமன்றம்


தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் சார்பாக தமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் தமிழ்ப் பட்டிமன்றம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இணையம் வழியாக நடைபெறவுள்ளது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் முகநூல் நேரலை:
ZEE தமிழ் முகநூல் நேரலை:
பட்டிமன்றத்தின் நடுவராக சன் தொலைக்காட்சிப் புகழ் திரு. ராஜா அவர்களுடன் புலவர் மா. இராமலிங்கம், திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் சிங்கைப் பேச்சாளர்கள் முனைவர் இராஜி சீனிவாசன், திரு. P. அருமைச்சந்திரன் PBM, திருமதி அகிலா ஹரிகரன், திரு. K.B. சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு “வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவது… நேற்றைய நினைவுகளா? அல்லது நாளைய கனவுகளா?” எனும் தலைப்பில் பேசவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் பொருட்டு தங்கள் நிறுவனத்திற்கான விளம்பர ஆதரவு செய்யவிரும்புவோர் எங்களை அணுகலாம்.
விழாவில் தங்கள் நிறுவனத்தின் ஒரு நிமிட அளவிலான விளம்பரக் காணொளிக் காட்சி பார்வையாளர்களைச் சென்றடையும் வண்ணம் நிகழ்ச்சிக்கிடையே வெளியிடப்படும். மேலும் நிகழ்ச்சிக்கான துண்டறிக்கையிலும் தங்கள் நிறுவனத்தின் இலச்சினை (logo) இணைத்து தமிழ் முரசு நாளிதழிலும் மற்ற சமூக இணைய ஊடகங்களிலும் (ZEE தமிழ் தொலைக்காட்சி முகநூல் நேரலை மற்றும் 8 Point Entertainment YouTube வழி) விளம்பரப்படுத்தி வெளியிடப்படவிருக்கிறது.
தமிழ் மொழி விழாவில் நாங்கள் படைக்கவிருக்கும் தமிழ்ப் பட்டிமன்றத்திற்கு தங்களின் பங்களிப்பையும் மேலான ஆதரவையும் அன்புடன் நாடுகிறோம்.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
சிங்கப்பூர்
WhatsApp Image 2020-12-08 at 19.17.37 (1)