Monthly Archives: April 2023


திரைப்படப் பாடல்களின் அழகு பொருளிலா? இசையிலா? – தமிழ் மொழி விழா 2023 – சிறப்புப் பட்டிமன்றம் 0

ஏப்ரல் 29ம் தேதி, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குத் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் கியட் ஹாங் சமூகமன்றமும் இணைந்து தமிழ் மொழி மாதத்தின் அங்கமாகப் படைத்த இரு சுற்றுப் பேச்சாளர்களுக்கானப் போட்டித் தேர்வுகளுக்குப் பின் இறுதிச்சுற்றை எட்டிப் பட்டிமன்றத்தில் பேசிய நான்கு மாணவர்களை அங்கமாகக் கொண்டு நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றம் வெற்றிகரமானதாக இருந்ததை திரளாக வந்திருந்த மக்கள் உறுதிசெய்தனர்! நிகழ்ச்சியை திருமதி சுவர்ணலதா ஆவுடையப்பன் மிக அழகாக நெறியாள்கை செய்தார். நேர்த்தியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய அக்ஷயினி […]

343985205_613637070817857_4990530256633222834_n

மரியாதை என்பது இன்று வயதுக்கே! திறமைக்கே! – தமிழ்ப் பட்டிமன்றம் 0

சிங்கப்பூர் கான்பெரா சமூக மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் நடுவர் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். தமிழ்மொழி வளர நல்ல பேச்சாற்றல் மிக்கப் பேச்சாளர்கள் தேவை. தமிழ் நிகழ்ச்சிகள் பல்வேறு பொதுத்தளங்களில் பெருமளவில் நடத்தப்படவேண்டும். மேலும் மக்களிடையே சிந்தனையைத் தூண்டும் இத்தகைய பட்டிமன்றங்களைத் தாங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் வருங்காலத்தில் நடத்திட விரும்பினால் எங்களை அணுகவும். தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

340768690_174487405515864_2828703361487896273_n

மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்கம் “கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் ஏற்படும் சவால்கள்” 0

24 மார்ச் 2023 மாலை நேரத்தில் நல்லதொரு செறிவான நிறைவான மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திடச் சிறப்பாகப் பங்களித்திட்ட முனைவர் ராஜி சீனிவாசன் அவர்களுக்கு நமது பாராட்டுதலும் நன்றியும் உரித்தாகுக! தமிழ்ப் பட்டமன்றக் கலைக் கழகத்தின் தலைவர், மதியுரைஞர், துணைத் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட செயலவைக் குழுவினர்கள் மற்றும் ஆயுள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறோம். முத்தான மாணவர்கள் உயர்நிலைப் படிப்பிலிருந்தாலும் சத்தான கெத்தான வகையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தனர். பல்லினக் கலாச்சார […]

337532677_761781705276096_1597272962047996567_n