தமிழ் மொழி விழா 2016 – சிறப்பு பட்டிமன்றம்


பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டுமா? நிதி ஒதுக்க வேண்டுமா? – பட்டிமன்றம்

தோல்விகளே வெற்றிக்கான படிகள் – பேச்சுப்போட்டி (தொ.கல்லூரி &உயர்நிலை 3,4,5 )

வளர்தமிழ் இயக்கம், சிண்டா என்கிற சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம், கல்வி அமைச்சின் தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழு, லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழு ஆகிய அமைப்புக்களின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றம் ஏப்ரல் 23ஆம் தேதி சோசூகாங் குரோவிலுள்ள ஐடிஈ காலேஜ் வெஸ்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சோசூகாங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சக்கி முஹமத் (zaqy Mohamed) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிண்டாவின் மூத்த நிர்வாக அதிகாரி திரு பரதன் மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கினார்.கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவின் இணை இயக்கநர் திரு வேணுகோபால் பேச்சாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதிக நேர்ம் ஒதுக்க வேணடும் என்ற அணியில் திரு முகமது சரீஃப், செல்வன் சுரேஷ்சங்கீத் (உயர்நிலைப் பிரிவில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்), திருமதி அகிலா ஹரிஹரன் ஆகியோர் வாதாடினர். நிதியை ஒதுக்க வேண்டும் என்ற அணியில் முனைவர் ராஜி சீனிவாசன், செல்வன் தயாநிதி ராஜகோபால் (தொடக்கக் கல்லூரி பிரிவில் முதல் பரிசு வென்ற மாணவர்), திருமதி ரம்யா சுரேஷ் ஆகியோர் வாதாடினர். இந்த பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்து பெருமை சேர்த்தவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராக இருந்த டாக்டர் பொன்ராஜ் ஆவார்.

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி சிண்டாவில் நடைபெற்றது. சிராங்கூன் தொ. கல்லூரி, செல்வன் தயாநிதி மாறன் முதல் பரிசாக 500 வெள்ளியும் செல்வன் ராஜகொபால் கலாநிதி இரண்டாம் பரிசாக 300 வெள்ளியும், ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியின் குமாரவேல் விக்னேஷ் மூன்றாம் பரிசாக 200 வெள்ளியும் பெற்றனர். உயர்நிலைப்பிரிவில், ஃபூச்சூன் பள்ளி சுரேஷ்சங்கீத், சி.தே.ப கணக்கு அறிவியல் உயர்நிலைப் பள்ளி தியோராஜன் டெரன்ஸ், அதே பள்ளியைச் சார்ந்த அய்யப்பபன் மதுமிதா ஆகியோர் முறையா 400, 250, 150 வெள்ளி பரிசுகளைப் பெற்றனர்.

பட்டிமன்ற விவாதத்தில் சூடுஅதிகமாகவே இருந்தது

“கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் சொல்லிக் கொடுப்பதல்ல, அறத்தையும் பண்பையும் சொல்லிக் கொடுக்க வேண்டும், அதற்குப் பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்,

“அரம் போலும் கூர்மையரேனும் – மரம்போல்வர்

மக்கட் பண்பில்லாதவர்”.

என்பதை உணர்ந்து அறிவிலும் பண்பிலும் சிரந்தவர்களாக நம் பிள்ளைகளை உருவாக்க பெற்றோர்கள் நிதியை விட நேரத்தையே அதிகம் செலவிட வேண்டும். திரு சரீஃப்

மாறிவிட்ட சூழ்நிலையில் வாழும் இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிக நேரம் ஒதுக்க வேண்டும்,மிகவும் Sensitive வாக அதிக சுதந்திரம் இருக்கும் சமுதாயத்தில் வாழும் நம் குழந்தைகளிடம் அதிக நேரம் ஒதுக்காவிட்டால் தவறான வழியில் செல்லக் கூடும் -திருமதி அகிலா

நேரம் என்பது தரமானதாக அளவில் குறைவானதாக செலவழித்தால் கூட போதும். ஆனால்
பன்முகத் திறன்களை வளர்க்கவும் உயர்கல்வி படிக்க வைக்கவும் அதிக நிதி ஒதுக்க வேண்டியது அவசியம். ராஜி சீனிவாசன்

நிதியைப் தாராளமாக ஒதுக்கும் போது பிள்ளைகளுக்கு சேமித்து வைக்கும் பழக்கம் வளரும்.நிதி உதவி தேவை உள்ளவர்களுக்கு பிள்ளைகளே உதவி முடியும்….ரம்யா சுரேஷ்

காலம் பொன் போன்றது அல்லகாலம் உயிர் போன்றது. ஒரு முறை போனால் மீண்டும் வராது….செல்வன் சுரே’ஷ் சங்கீத்.

இறுதியில் தீர்ப்புக் கூறிய டாக்டர் பொன்ராஜ் அவர்கள் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தைச் ஒதுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின் தானே முன்மாதிரியாக இருந்து அவர்களை வழிநடத்த வேண்டும். நிதி என்பது அரசின் திட்டங்களைப் பொருத்தது. திறமையான அரசாக இருந்தால் பிள்ளைகளுக்கான நிதிச் சுமையைக் குறைக்கலாம். ஆக நிதிக்கு மாற்று ஏற்பாடுகள் எப்போதுமே சாத்தியம் நேரம் ஒதுக்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் சாத்தியமில்லை எனவே பெற்றோர்கள் அதிகமாக நேரத்தையே ஒதுக்க வேண்டும் என்றார்.

IMG_6289 (1)

IMG_6239

IMG_6414

IMG_6264 (2) (1)

FLYER April 23 event 2016

LS Tamil Debate Ticket (3)