மே 17 – தமிழ்மொழி விழா 2025


தேர்தல் காரணமாக மே 3ல் நடக்கவேண்டிய நம் நிகழ்ச்சி, வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஒப்புதலுடன் மே 17க்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கழகம் அனைவரையும் வரவேற்கிறது. 

https://youtu.be/amGGFpbZXEU?si=cLXyYagY-8kaLLQY

 

https://www.youtube.com/watch?v=MeCwfFvoT-E

May17 flyer

மாணவர் பயிலரங்கம், பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இந்த ஆண்டுக்கான தமிழ்மொழி விழா நிகழ்வை, மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் மூன்று பிரிவுகளாக நடத்தியது. மார்ச் 8ல் பேச்சுப் பயிலரங்கு அதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மார்ச் 15ல் ஒரு போட்டி, அதில் வென்றவர்ககளுக்கு பரிசு மற்றும் வென்றவர்களையே பேசவைத்த ஒரு பட்டிமன்றம் என்று மூன்று பிரிவுகளும் சிறப்பாக நடந்தேறின. முதல் இரண்டு பிரிவுகள் தேசிய நூலகத்திலும், இறுதி நிகழ்வு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் மே 17ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்தப் போட்டிகள் உயர்நிலை 3,4 மற்றும் தொடக்க்க்கல்லூரி, பல்கலை என்று இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. முதல் குழுவில் மணிகவிராஜ் செல்வமணி, சீதாலட்சுமி புத்தன் காவ்யா, ராஜ்பாபு ரசான் தரனேஷ் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை (150,100,80 வெள்ளி) வென்றனர். ஜெகந்நாதன் மோனிகா, முகமதுஹம்தான் பின் காதர் மொஹிதீன் ஊக்கப்பரிசாக (50,50 வெள்ளி) பெற்றனர். இரண்டாம் குழுவில் ரவீந்திரன் மகாலட்சுமி, ரகுநந்தன், சுந்தரவடிவேல் பிரபவ் முதல் மூன்று பரிசுகளை அதேபோல் வென்றனர்.

மே 17ஆம் தேதி நடந்த இறுதி நிகழ்வில் west coast Jurong West குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். தன் சிறப்புரையில் தமிழின் ஆளுமை ஒவ்வொரு தமிழர் வீடுகளிலும் இருக்கவேண்டும் என்று அரங்கம் நிறைந்த கைதட்டுடன் குறிப்பிட்டார். வீட்டில் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க பெற்றோர்கள் தினமும் நேரம் ஒதுக்கவேண்டுமென்று சொல்லி, தன் மூன்று பிள்ளைகளுக்கும் தான் நேரம் ஒதுக்குவதாக மீண்டும் அரங்கம் நிறைந்த கைதட்டலுடன் குறிப்பிட்டார்.

கவிஞர் மகுடேசுவரனின் மாணவர் பாசறை அமைப்பு நடத்திய சொல் தமிழ்ச்சொல் போட்டியில் அரங்கத்தில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றனர். இறுதியாக நடந்த பட்டிமன்றத்தின் தலைப்பு; இன்றைய இளையர்கள் பாரம்பரிய உணவை உண்கிறார்களா ஒதுக்குகிறார்களா என்பதாகும் உண்கிறார்கள் என்ற அணியில் திருமதி சக்திதேவி, செல்வன் ரகுநந்தன், செல்வி சு.பு.காவ்யா ஆகியோரும், ஒதுக்குகிறார்கள் என்ற அணியில் திருமதி நபிலா, செல்வன் ராஜ், செல்வி மகாலட்சுமி ஆகியோரும் வாதிட நடுவராக இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன்

மொத்த நிகழ்ச்சியையும் திருமதி அன்னபூரணி கார்த்திகேயன் சிறப்பாக நெறியாளுமை செய்தார்

செய்தி

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்