- Views 179
- Likes
D3 டைமண்ட் , 8 பாயிண்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இணைந்து படைத்த அன்னையர் நாள் விழா 2024 – “அன்பின் இமயம் அம்மா” என்ற நிகழ்வில் மூன்று அன்னையர்களுக்கு அன்னையர் திலகம் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. திருமதி முத்துவீராயி, திருமதி கவிதா குலோத்துங்கன், திருமதி அமுதா கலியபெருமாள் ஆகிய சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் அன்னையர்கள் விழாமேடையில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமைச்சந்திரன் PBM முன்னிலையில் சிறப்பு விருந்தினர் நடிகை கோவை சரளா அவர்கள் மூலம் விருதுகள் வழங்கிப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அன்னையர்கள் தேர்வு ஒருங்கிணைப்பினை கழகத்தின் மூத்த மதியுரைஞர் திரு ரஜீத் ஏற்று நடத்தினார். இந்த நிகழ்விற்கு பொருளுதவி ஆதரவு வழங்கிய இந்து அற வாரியத்திற்கு மிக்க நன்றி!