“தமிழ் மொழி மாத விழா – 2022″ நிகழ்ச்சிக்காக ஏப்ரல் 16ஆம் நாள் “சிறப்புப் பட்டிமன்றம்”


சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றமும் இணைந்து 2022-ஆம் வருடத்தின் தமிழ் மொழி மாத விழாவிற்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “சிறப்புப் பட்டிமன்றத்தை” நடத்த இருக்கிறது.
பட்டிமன்றத் தலைப்பு:
தமிழ் மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா?

இருக்கிறது!
*கோபிகா நரச லக்ஷ்மி (அணித் தலைமை)
*முத்துகுமார் மகிஷா
* சொக்கலிங்கம் ரோகித்குமார்

இல்லை!
*விஷ்ணு வர்தினி ஆனந்தன் (அணித் தலைமை)
*ராஜு நாரயணன் கவின்நிலா
*இனியா செந்தில்குமார்

நமது தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் சார்பாக அனைவரையும் தமிழ் மொழி விழாச்  சிறப்புப் பட்டிமன்ற நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.   பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். உங்களுக்காகவும் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் இந்த இணைப்பின் மூலம் பதிவு செய்துகொள்ளுங்கள்:  https://go.gov.sg/debate
நிகழ்ச்சி பற்றிய மேல் தொடர்புக்கு அணுகவும்:
திரு. அருமைச் சந்திரன், PBM: +65 98552961
முனைவர் பா. ராமநாதன்: +65 83321430
முனைவர் நிசார்: +65 85034204
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
சிங்கப்பூர்
WhatsApp Image 2022-04-11 at 8.19.46 PM